மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சினையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன் + "||" + Water problem No schools were closed Minister Sengottaiyan

தண்ணீர் பிரச்சினையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

தண்ணீர் பிரச்சினையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்
தண்ணீர் பிரச்சினையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை,

தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை.  பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்தால் உடனே சரிசெய்யப்படும். பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். 

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 

இந்த ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது.

5 பாடங்கள் கொண்டு வருவது பற்றி முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகு தான் முடிவு செய்யப்படும். பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.

2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பாடப்புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரி செய்யப்படும்.

உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.