தேசிய செய்திகள்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீது கவனம் செலுத்துங்கள் : மத்திய அரசுக்கு அகிலேஷ் யாதவ் பதில் + "||" + Govt. should focus on the promises they have made to people Akhilesh Yadav

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீது கவனம் செலுத்துங்கள் : மத்திய அரசுக்கு அகிலேஷ் யாதவ் பதில்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீது கவனம் செலுத்துங்கள் : மத்திய அரசுக்கு அகிலேஷ் யாதவ் பதில்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீது கவனம் செலுத்துங்கள் என மத்திய அரசுக்கு அகிலேஷ் யாதவ் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இதற்காக இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். 

கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 

இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் பேசுகையில், “அவர்கள், முதலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதற்கு அதிகமான கட்சிகள் ஆதரவு அளிக்காது" என கூறினார்.