மாநில செய்திகள்

குடிநீர் பிரச்சினை: ஜூன் 22 முதல் திமுக ஆர்ப்பாட்டம் + "||" + Drinking water issue, DMK demonstration

குடிநீர் பிரச்சினை: ஜூன் 22 முதல் திமுக ஆர்ப்பாட்டம்

குடிநீர் பிரச்சினை: ஜூன் 22 முதல் திமுக ஆர்ப்பாட்டம்
குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உள்ளாட்சித்துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் குடிநீரின்றி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.

குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லையென பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை, தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு  வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டம் - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி நகராட்சி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
3. முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு
முசிறி ஊராட்சி காட்டுப்பாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
4. திருவெண்ணெய்நல்லூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பெரியவாடியூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராமமக்கள் காலிகுடங் களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.