தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு + "||" + Tamil Nadu rejects Keralas offer to supply drinking water

தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு

தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு
போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. சென்னை  மாநகரில் இரவு பகல் என்று பார்க்காமல் வாகனங்களில் குடும்பத்துடன் குடங்கள், பிளாஸ்டிக் கேன்களை எடுத்து கொண்டு தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைவதை காணமுடிகிறது. சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முன்வந்ததாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் தேவையுள்ள இடங்களுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரெயில் மூலம் அனுப்ப தமிழக அரசிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் அலுவலகம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.  இப்போதைக்கு தேவையில்லை என தமிழகம் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது - வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளார் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
2. பி.வி.சிந்துவிற்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது.
3. தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
4. தமிழகம்-கேரளா நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் பேச்சுவார்த்தையில் முடிவு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
5. தமிழகத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகள் - மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தல்
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.