தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; பிரதமரிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல் + "||" + State status for Puducherry; CM Narayanasamy urges the Prime Minister

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; பிரதமரிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; பிரதமரிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,

தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. தலைமையிலான
முதல் ஆட்சி காலத்தில், மத்திய திட்ட குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  2015ம் ஆண்டு, ஜனவரி 1ந்தேதி செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்- மந்திரிகளும், அந்தமான் துணை நிலை கவர்னரும் இடம் பெற்றுள்ளனர்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், முதல் முறையாக நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 15ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.  இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.  மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது.  இதனால் பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடும் வறட்சி காரணமாக காய்ந்து வரும் தென்னை மரங்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. எனவே அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் கவுதமன் வலியுறுத்தல்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் கவுதமன் வலியுறுத்தியுள்ளார்.
3. கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் சுசீந்திரம் குளத்தின் மடையை திறக்க வலியுறுத்தல்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், சுசீந்திரம் குளத்தின் மடையை திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
4. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் பொதுமக்களுக்கு அதிகாரி வலியுறுத்தல்
மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க செயற்பொறி யாளர் வலியுறுத்தி உள்ளார்.
5. மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் மத்திய மந்திரி வலியுறுத்தல்
மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள் என பொதுமக்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார்.