மாநில செய்திகள்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால் + "||" + No confidence in the Speaker It will be taken on July 1 Speaker Dhanapal

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால்
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் கூறினார்.
சென்னை,

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர்  பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை  நடைபெறும். 

தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம் பெறும்.  மறைந்த உறுப்பினர்களுக்கு 28-ந்தேதி இரங்கல்  தீர்மானம் நிறைவேற்றப்படும்.  29, 30-ந்தேதி அரசு விடுமுறை.

* ஜூலை 1-ந்தேதி வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 3ம் தேதி கூட்டுறவு, உணவுத்துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும். 

* ஜூலை 4ந் தேதி  எரிசக்தி துறை,  ஆயத்தீர்வு துறை  மானிய கோரிக்கை  மீதான விவாதம் நடைபெறும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்
தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
2. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அவகாசம் கேட்பு
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் கேட்டு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மனு அளித்துள்ளார்.