தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல - மத்திய அரசு பதில் + "||" + Pulwama Attack Not An Intelligence Failure, Government Tells Parliament

புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல - மத்திய அரசு பதில்

புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல - மத்திய அரசு பதில்
புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார்வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தும் பாதுகாப்பு படை வீரர்களை வான்வழியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியல்ல என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மாநிலங்களவை கேள்வியொன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. உளவுத்துறையின் உள்ளீடுகள் பல்வேறு நிறுவனங்களிடையே நிகழ்நேர அடிப்படையில் பகிரப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய நிதியுதவியால் பயங்கரவாதம் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், பயங்கரவாதத்தின் மீதான சகிப்புத்தன்மையற்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு படையினரால்   தொடர்ச்சியான நடவடிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளைக் கொடியுடன் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவத்தின் அறிவுரைக்கு பாகிஸ்தான் பதில்
எல்லையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளின் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் வழங்கிய அறிவுரைக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
2. காஷ்மீருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா ஆலோசனை
காஷ்மீருக்கு எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
3. உங்கள் மகன்கள் பயங்கரவாதியாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்... காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை
உங்கள் மகன்கள் பயங்கரவாதிகளாவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என்று காஷ்மீரில் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது.
4. பயங்கரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் -இந்தியா
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
5. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் - இந்திய வெளியுறவுத்துறை
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் மட்டும்தான் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.