தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு + "||" + Trinamool, SP on board with Amit Shahs JK Prez rule extension in RS

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வரும் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்ற மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா தொடர்பான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடக்கிறது.

இதில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, மக்கள் ஜனநாயக கட்சி மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தை மக்கள் ஜனநாயக கட்சி ஆதரித்தது. உள்துறை மந்திரி அமித் ஷா மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. நசீர் அகமது லாவே கூறினார். ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சியை விரிவுபடுத்துவதற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்தார். இதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார்.
2. மாநிலங்களவை தேர்தல்: மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மன்மோகன் சிங் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
3. ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
4. மாநிலங்களவையில் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் நிறைவேறியது
மாநிலங்களவையில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் நிறைவேறியது.
5. மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது
மாநிலங்களவையில் மோட்டார் வாகன மசோதா நிறைவேறியது. அதில் விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.