உலக செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 50 பேர் உயிரிழப்பு + "||" + Nigeria fuel tanker explosion kills dozens

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள டென்யூ மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெட்ரோலை பாத்திரத்தில் சேகரிக்க அங்கு குவிந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70 பேர் படுகாயமடைந்தனர்.

லாரியிலிருந்து பெட்ரோல் கொட்டியதும் மக்கள் சேகரிக்க ஓடியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்குவந்த அதிகாரிகள் இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் செவுடன் காதில் சங்கு ஊதியது போன்று யாரும் கேட்கவில்லை. அவர்களுடைய கவனம் எல்லாம் பெட்ரோலை சேகரிப்பதிலேயே இருந்தது. இறுதியில் லாரி வெடித்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் போராடி வருகிறார்கள். நைஜீரியாவில் இதுபோன்ற விபத்துக்களில் மக்கள் பெட்ரோல் சேகரிக்க சென்று சிக்குவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 65 பேர் பலி
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் பலியாகினர்.
2. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
3. நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
4. நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி - போகோஹரம் பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் நடந்த மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.