தேசிய செய்திகள்

தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + SC serves notices to Centre, Election Commission On Banning cash transfer schemes before elections

தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலின் போது இலவசங்கள் அறிவிப்பு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது. இதுபோன்ற அறிவிப்புக்கள் விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் எல்லூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பெந்தபதி புல்லா ராவ் சுப்ரீம் கோர்ட்டில் இலவசங்கள் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. 

இதுபோன்று ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்காளம், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும் நேரடியாக பணம் வழங்கும் திட்டம், இலவச திட்டங்கள் என பல திட்டங்களை அறிவித்தன. இவை அந்தந்த கட்சிகளுக்கு மத்தியில் ஆட்சியை பிடிக்கவும், மாநிலங்களில் அரசியல் லாபத்தை கொடுக்கவும் தான் பயன்பட்டது. இதுபோன்ற நேரடியாக பணம் வழங்கும் திட்டம், இலவசங்கள் அறிவிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

எனவே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற இவைகளை தடை செய்ய தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, 5 மாநில அரசுகள் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கூவம் நதி மாசு அடைந்த விவகாரம்: தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
கூவம் நதி மாசு அடைந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்த தேவையில்லை என கூறி அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
2. காஷ்மீர் விவகாரம்: தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு
காஷ்மீர் விவகாரத்தில் தேசத்துரோக சட்டத்தின்கீழ் டெல்லி மாணவியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. “ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்” -சுப்ரீம் கோர்ட்டு
ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப அரசுக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
4. ஓலா, உபேர் போன்ற டாக்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஓலா, உபேர் போன்ற டாக்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.