தேசிய செய்திகள்

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு + "||" + SC asks Meghalaya to deposit Rs 100 cr fine for illegal coal mining

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும் ஓய்வுப்பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் முறையாக விண்ணப்பிக்காமலும், சட்டவிரோதமாக பல சுரங்கங்கள் செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத சுரங்கங்களை  தடுக்க தவறியதற்காக மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருந்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு அறிவுறுத்தினர். அங்கு சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் ஒப்புடைக்குமாறு கூறிய நீதிபதிகள், கோல் இந்தியா நிறுவனம் இந்த நிலக்கரியை ஏலமிட்டு அந்த தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செலுத்துமாறு வலியுறுத்தினர்.

முன்னதாக, தங்கள் மாநிலத்தில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாக மேகாலயா அரசு அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை
வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.
2. அமைச்சரவைக்குத்தான் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது - நாராயணசாமி பேட்டி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தி.மு.க. மனு ‘தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும்’
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம், தி.மு.க. மனு அளித்தது.
4. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தை ஒழுங்குபடுத்த சட்டமா? மத்திய அரசு பதில்
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் மற்றும் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமா? மத்திய அரசு பதில் பதில் அளித்தனர்.
5. நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.