மத்திய பிரதேசத்தில் அதிகாரியை பேட்டால் தாக்கிய எம்.எல்.ஏ.விற்கு பா.ஜனதா நோட்டீஸ் விடுத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் வர்கியாவின் மகனும், அதே கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜய் வர்கியா பேட்டால் தாக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியும் எச்சரிக்கையை விடுத்தார். சம்பவத்தை பற்றி அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் “யாராக இருந்தாலும், யாருடைய மகனாக இருந்தாலும், இத்தகைய அராஜகத்தையும், மோசமான நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என கண்டித்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் எம்.எல்.ஏ. விஜய் வர்கியாவிற்கு பா.ஜனதா கட்சி தலைமை நோட்டீஸ் விடுத்துள்ளது. அரசு அதிகாரியை தாக்கிய விவகாரத்தில் பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய தகவலை மாற்றி காங்கிரசை கதிகலங்க வைத்துள்ள ஜோதிராதித்ய சிந்தியாவால் மத்தியபிரதேச அரசுக்கு புதிய சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்பட்ட தகவலுக்கு முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர் எஸ்.ஆர்.விஸ்வநாத் பதிலளித்துள்ளார்.