உலக செய்திகள்

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி, இந்தியருக்கு 13 ஆண்டு சிறை + "||" + Indian origin banker gets 13 years in jail for forgery cheating in Singapore

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி, இந்தியருக்கு 13 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி, இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்த இந்தியரான கலே ஜெகதீஷ் புருசோத்தம் (வயது 43) 2010 ஜூன் முதல் 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 கோடி) வரை சுருட்டியுள்ளார். மேலும், போலி கணக்குகளை தொடங்கி வங்கியில் இருந்து பல மில்லியன் டாலரை கடனாக பெற்றும் மோசடி செய்துள்ளார். 2013ம் ஆண்டு கலே ஜெகதீஷ் புருசோத்தம் மீது வங்கி வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோது, அவரது மோசடி வேலைகள் அம்பலமானது. இதையடுத்து, கலே ஜெகதீஷ் புருசோத்தம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

விசாரணையின் முடிவில் கலே ஜெகதீஷ் புருசோத்தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் காலமானார்
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்.
2. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி
சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறையும், 15 பிரம்படியும் கொடுக்கப்பட்டது.
3. சிங்கப்பூரில் நிரவ் மோடி குடும்பத்தினர் வங்கி கணக்கு முடக்கம்
சிங்கப்பூரில் நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
4. சிட் ஃபண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்கத்தில் 22 இடங்களில் சிபிஐ சோதனை
மேற்கு வங்கத்தில் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டுள்ளது.
5. தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: 162 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பு
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மாற்று விமானத்தில் 162 பயணிகள் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.