தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் + "||" + BCCI writes to ICC after anti-India banners fly above Leeds during India Sri Lanka match

இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்

இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார்
இந்தியாவுக்கு எதிரான பேனர் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.சி.சி.யிடம் பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் லீட்சில் நடந்தது. 

போட்டியின் போது மைதானத்துக்கு மேலே 2 முறை பறந்த குட்டி விமானத்தில் காஷ்மீருக்கு நீதி வேண்டும்,  இனப்படுகொலையை நிறுத்து ஆகிய வாசகங்கள் அடங்கிய பேனர் இடம் பெற்று இருந்தது. இந்த உலக கோப்பை போட்டியில் இதுபோன்ற சர்ச்சை நடைபெறுவது 2–வது முறையாகும். கடந்த ஜூன் 29–ந் தேதி நடந்த பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ‘பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனருடன் குட்டி விமானம் பறந்தது. 

இந்தியாவுக்கு எதிரான வாசகம் கொண்ட பேனர் பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

‘இதுபோன்ற சம்பவத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றிய எங்களது கவலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்து இருக்கிறோம். இதுபோன்ற சம்பவம் அரைஇறுதியிலும் தொடர்ந்தால் உண்மையிலேயே துரதிர்ஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது’ என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஐ.சி.சி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விமானத்தின் மூலம் அரசியல் குறித்த பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலக கோப்பை போட்டியில் எந்த அரசியல் கோ‌ஷங்களையும் ஆதரிப்பதில்லை. இந்த தொடரில் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதற்கு முன்பு நடந்த சம்பவத்தின் போது மேற்கு யார்க்ஷையர் போலீசார் இனிமேல் இப்படி நடக்காது என்று உறுதி அளித்து இருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்து இருப்பது அதிருப்தியை அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தானில் இன்றும், நாளையும் நடக்கிறது.
2. ஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
ஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் சரணடைந்த 900 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 10 இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
4. கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் - வைகோ கண்டனம்
கோத்தபய ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
5. ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பெறுவதால் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை : அமெரிக்க அதிகாரி
ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை பெறுவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.