தேசிய செய்திகள்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா + "||" + West Bengal Congress chief Somen Mitra offers to resign

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களையே பெற்று படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே பிற தலைவர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். தேர்தலில் மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, அப்போதே பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், சக நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லை.

இந்நிலையில், ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதால், சோமன் மித்ராவும் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை மேற்கு வங்காள காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் மேலிட பொறுப்பாளர் கவுரவ் கோகாய் நேரில் சந்தித்தார். மித்ராவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும், தொடர்ந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார். புதிய தேசிய தலைவர், மாநில கமிட்டிகளை மாற்றி அமைக்கும்போது, மாநில தலைவர்களை மாற்றுவது பற்றியும் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்
ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.
2. மேற்கு வங்காளத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் கைது
மேற்கு வங்காளத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
3. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
5. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி
சிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.