தேசிய செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல் + "||" + Actress Sridevi's death was not an accident Kerala Prison DGP Trauma information

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்
கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் போலீசுக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வருமாறு:–

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எனது நண்பர் டாக்டர் உமாதாதனிடம் அதுபற்றி கேட்டேன். பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவி மரணம் விபத்து அல்ல என்பதை நிரூபிப்பதாக உள்ளன. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தாலும், குளியல் தொட்டியில் உள்ள ஒரு அடி தண்ணீரில் மூழ்க முடியாது. சிலர் அழுத்தம் தராமல், ஒரு நபரின் கால்களோ அல்லது தலையோ ஒரு அடி தண்ணீரில் மூழ்காது. அது கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் கூறினார்.

இவ்வாறு டி.ஜி.பி. அதில் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24–ந் தேதி தனது கணவருடன் ஒரு திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 30 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்து பிளஸ்-2 மாணவர் பலி - நண்பருக்கு தீவிர சிகிச்சை
மதுரையில் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது பஸ் மோதியது. இதில் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒருவர் இறந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2. அருணாசல பிரதேசத்தில் விபத்து, மதுரை ராணுவ வீரர் பலி
அருணாசல பிரதேசத்தில் நடந்த விபத்தில் மதுரை ராணுவ வீரர் உயிரிழந்தார்.
3. வாகனம் மோதி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம் அடைந்தது.
4. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
பனவடலிசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
5. ஆரல்வாய்மொழி அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - வாலிபர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-