தேசிய செய்திகள்

காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு + "||" + On the birthday of Gandhi, Sardar Vallabhbhai Patel Go on a pilgrimage PM Modi orders BJP MPs

காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி, 

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி.க்கள் கூட்டம்

நாடாளுமன்ற பா.ஜனதா கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், இரு அவைகளின் பா.ஜனதா எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

மகாத்மா காந்தி பிறந்தநாள், அக்டோபர் 2–ந் தேதியும், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் அக்டோபர் 31–ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அவரவர் தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

பாத யாத்திரை

அக்டோபர் 2–ந் தேதிக்கும், அக்டோபர் 31–ந் தேதிக்கும் இடையே 150 கி.மீ. தூரம் பாத யாத்திரை செல்ல வேண்டும். அதுபோல், மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி.க்கள், பா.ஜனதா பலவீனமாக உள்ள தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களுக்கு புத்துயிரூட்டுதல், அவற்றை சுயசார்பு உள்ளதாக ஆக்குதல், மரக்கன்று நடுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாக பாத யாத்திரை அமைய வேண்டும். நமது தேர்தல் அறிக்கையில் கூறியவை எல்லாம், நமது எதிர்கால தொலைநோக்கு பார்வையில் பிரதிபலிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறினார்.

இந்த கூட்டத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் பற்றி பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல்: இரவு 10 மணிக்கு மேல் பிரசார கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தக்கூடாது கலெக்டர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
3. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கலந்தாய்வு கூட்டத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு.
4. தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு
தஞ்சை பூக்கார தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எம்.எல்.ஏ. நீலமேகத்தின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
5. ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொலை எதிரொலி தமிழகத்தில் உஷார் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கொடூரமாக கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உஷார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.