தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் + "||" + In video message, Al Qaeda chief threatens India over Kashmir

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்-ஜவாஹிரி வெளியிட்டு உள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கம் மீது இடைவிடாத தாக்குதலை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளான். 

காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள அவன்,  “காஷ்மீரை மறந்து விடாதீர்கள்” என்று பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளான். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, தலிபான், ஹக்கானி நெட்வோர்க் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் படையெடுப்பால் அல்-கொய்தா செயல் இழக்க தொடங்கி விட்டது. 

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவம் எல்லையை தாண்டிய பயங்கரவாதத்தை அழிக்க அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்துகிறது. அதனால் பயங்கரவாதிகளை இப்போது ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இயக்கங்கள் பயிற்சி அளித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலி
அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் பலியானார்.
2. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
3. தங்கம் இருப்பு பட்டியலில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேற்றம்
தங்கம் அதிகமாக இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
4. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
5. பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.