தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது + "||" + Rahul Gandhis follower count on Twitter crosses 10-million mark

ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது

ராகுல் காந்தியை டுவிட்டரில்  பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.
ராகுல் காந்தி சமூக வலைதளமான டுவிட்டரில் கடந்த 2015-ம் ஆண்டு இணைந்தார். அவரை 4 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். இந்த மைல்கல் நிகழ்வு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், டுவிட்டரில் என்னை ஒரு கோடிபேர் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த நிகழ்வை நான் அமேதியில் கொண்டாடப் போகிறேன். அங்கு காங்கிரஸ் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.  கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் டுவிட்டரில் இணைந்த பிரதமர் மோடிக்கு தற்போது 4.85 கோடி பேர் பின்தொடர்பவர்களாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. கடின உழைப்பாளியான மோடிக்கு எதிராக ராகுல் காந்திக்கு இந்திய அரசியலில் வாய்ப்பு இல்லை -ராமசந்திர குஹா
கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்த மோடிக்கு எதிராக இந்திய அரசியலில் ராகுல் காந்திக்கு வாய்ப்பு இல்லை என வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா தெரிவித்துள்ளார்.
3. பா.ஜனதாவும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; மாயாவதி சொல்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது 64–வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி
சிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
5. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.