தேசிய செய்திகள்

கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு + "||" + Karnataka issue in Lok Sabha Congress, DMK Walk out as 2nd day

கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு

கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு
கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி, 

கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

ஆட்சியை கவிழ்க்க சதி

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தொடர்ந்து 3–வது நாளாக கர்நாடக விவகாரத்தை எழுப்பினார்.

அவர் பேசியதாவது:–

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் ராணுவ சட்டம் பின்பற்றப்படுவது போல் தெரிகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள மும்பை ஓட்டலுக்குள் நுழையவிடாமல், கர்நாடக மந்திரி டி.கே.சிவகுமாரை தடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மந்திரி பதில்

அவரது குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மறுத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு காங்கிரஸ் பிரமுகர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு அளிக்கும்படியும் மும்பை போலீஸ் கமி‌ஷனரிடம் கடிதம் கொடுத்துள்ளனர் (அந்த கடிதத்தை காண்பித்தார்). எனவே, போலீசார் தங்களது கடமையை செய்துள்ளனர்.

கர்நாடக விவகாரம், ராகுல் காந்தியால்தான் உருவாக்கப்பட்டது. அவரை பின்பற்றியே மற்றவர்களும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநடப்பு

மந்திரியின் விளக்கத்தால் திருப்தி அடையாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோ‌ஷம் எழுப்ப தொடங்கினர். ‘நீதி வேண்டும்’, ‘ஜனநாயகத்தை காப்பாற்று’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்களும், சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் காங்கிரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் சில காகிதங்களையும் சபையில் காண்பித்தனர்.

பின்னர், காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர். நேற்று முன்தினம் வெளிநடப்பில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் நேற்று வெளிநடப்பு செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.
2. காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
3. வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? சீமான் கேள்வி
வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? வந்துள்ளது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
4. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்
காங்கிரஸ் மூத்ததலை வர்களான பரமேஸ்வர், ஜாலப்பா ஆகியோரின் மருத்துவகல்லூரிகள், வீடு-அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
5. ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.