மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol prices unchanged in Chennai

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.  எனினும், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 5ந்தேதி மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இது அன்று நள்ளிரவே நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.  இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது.  இதன்படி, சென்னையில் கடந்த 6ந்தேதி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.70க்கும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.70.07க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.
2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
3. சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. சென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் 6வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. 5-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை தொடர்ந்து 5 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.