தேசிய செய்திகள்

பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி + "||" + Bihar: 8 dead, 6 injured after a speeding truck rammed into a wedding pandal

பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி

பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி
பீகாரில் திருமண பந்தல் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியதில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
லாக்கிசராய்,

பீகாரின் லாக்கிசராய் பகுதியில் சாலையோரம் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் போடப்பட்டு இருந்தது.  இதனை அடுத்து அங்கு திருமண வீட்டினர் வந்து சென்றபடி இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு லாரி ஒன்று அந்த வழியே வேகமுடன் வந்துள்ளது.  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி திருமண பந்தல் மீது மோதியது.  இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவம் நடந்தபின் லாரியை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாத்தலை அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
வாத்தலை அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியாயினர்.
2. சேந்தமங்கலத்தில் பரபரப்பு இருதரப்பினர் மோதல்; 8 பேர் கைது போலீசார் குவிப்பு
சேந்தமங்கலத்தில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். அதில் 8 ே்பரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
5. புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது
புவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.