மாநில செய்திகள்

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி + "||" + Adair, Covam, Buckingham Canals To strengthen the canes 2,371 crore allocation- Chief Minister Palanisamy

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு என அவை 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை,

சட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* கோவையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். 61 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ.178 கோடி ஒதுக்கீடு

* அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு

* அங்கன்வாடிமையங்களில்  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 38000 அங்கன்வாடி மையங்களுக்கு பராமரிப்பு நிதி முறையாக வழங்கப்படும்

* சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்

* ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்