தேசிய செய்திகள்

பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார் + "||" + Bharathiar sings the song Nirmala seetharaman, who filed the budget  P Chidambaram praised

பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்

பட்ஜெட்  தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்
பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழ்ந்தார்.
புதுடெல்லி,

மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது கூறியதாவது:-

நான் மகிழ்ச்சியான சூழ்நிலையில் பேச விரும்புகிறேன். நேற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நான் மகிழ்ச்சியடையவில்லை, ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் ஒரு அடியை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை.

கர்நாடகாவில், கோவாவில் நாம் கண்டது அரசியல் முன்னேற்றம் என்று தோன்றலாம், ஆனால் அது பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மதிப்பீட்டு முகவர், உள் நிறுவனங்கள் இந்திய ஊடகங்களைப் பின்பற்றுவதில்லை.

அரசியல் ஸ்திரமின்மை குறித்து அவர்கள் கேட்பது மற்றும் படிப்பது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்?. 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை.

மாநிலங்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் பாராட்டினார். தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி என கூறினார்

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.
2. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
அனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.
3. ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறையின் மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
4. ”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு
”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” என ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
5. குடும்பத்தினர் மூலம் வெளியிடும் ப.சிதம்பரத்தின் ‘டுவிட்டர்’ பதிவுகள் வழக்கு விசாரணையை பாதிக்கிறது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
குடும்பத்தினர் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கு விசாரணையை பாதிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் வாதிட்டார்.