மாநில செய்திகள்

“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” - துரைமுருகன் + "||" + Government is everything Don't look at profit; In the transport sector Gemma is not profitable!-Duraimurukan

“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” - துரைமுருகன்

“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” - துரைமுருகன்
“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” என துரைமுருகன் கூறினார்.
சென்னை,

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கோ.வி.செழியன், போக்குவரத்துத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கோரினார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் மினி பஸ் தேவையில்லாத ஒன்று என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கிராமங்களில் உள்ள குறுகலான சாலைகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தினாலேயே மினி பஸ் சேவை துவங்கப்பட்டது எனக் கூறினார்.

மேலும் எந்த ஜென்மத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்காது எனக் கூறிய துரைமுருகன், லாப நோக்கம் பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், போக்குவரத்து கழகம் லாப நோக்கோடு அல்ல, சேவை நோக்குடன் தான் இயங்கி வருகிறது. பேருந்துகள் அதிகம் இயங்கும் வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் முன்வராத காரணத்தால் 1500 பர்மிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அழைப்பு
முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரை போல உடல் உறுப்பு தானங்களை வழங்க அனைத்து உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்..!
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் சென்னையை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அரசு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவை விதி 110-இன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்
ஏதாவது ஒரு திட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
5. தபால்துறை தேர்வுக்கான விவாதம்: திமுக வெளிநடப்பு
தபால்துறை தேர்வுக்கான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.