தேசிய செய்திகள்

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு + "||" + For Vaiko Not to be sworn in To Venkayya Naidu Sasikala Pushpa petition

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு
பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
புதுடெல்லி,

2009-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். 23 ஆண்டுகளுக்குப்பின் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார்.

இந்நிலையில்  சசிகலா புஷ்பா எம்.பி. ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை தமிழர் விரோதியாக தொடர்ந்து சித்தரித்து வருகிறார் வைகோ என்றும் சசிகலா புஷ்பா அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை- வைகோ
வேட்பு மனு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என வேட்பு மனு ஏற்புக்கு பிறகு வைகோ உருக்கமான பேட்டி அளித்தார்.
2. இஸ்லாமியர்கள் ஜம் ஜம் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என சொல்வதா? -வைகோ கண்டனம்
இஸ்லாமியர்கள் ஜம் ஜம் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என சொல்வதா? என்று வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. வைகோவுக்கு வாய்ப்பிருக்கிறதா?
தமிழகத்தில் வருகிற 24-ந் தேதியுடன் 6 மேல்சபை (மாநிலங்களவை) உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.
4. பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் விலைவாசி உயரும் திருச்சியில் வைகோ பேட்டி
பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் விலைவாசி உயரும் என்று திருச்சியில் வைகோ தெரிவித்தார்.
5. என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் தஞ்சையில் வைகோ பேச்சு
என் உயிர் மூச்சு அடங்கும் வரை தமிழர்களை காக்க போராடுவேன் என தஞ்சையில் வைகோ பேசினார்.