கிரிக்கெட்

இரண்டாவது அரை இறுதி போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு + "||" + Australia win the toss and elect to bat first against England in the second semifinal of CWC19

இரண்டாவது அரை இறுதி போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

இரண்டாவது அரை இறுதி போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு. இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச உள்ளது.
பிர்மிங்காம் ,

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச உள்ளது.

ஆஸ்திரேலியா லீக் சுற்றில் சிறப்பான வெற்றிகளை குவித்து இருந்தது. எனினும், கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. மறுபுறம் இங்கிலாந்து அணி கடைசி இரண்டு லீக் சுற்றுப் போட்டிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தன்னம்பிக்கை பெற்றுள்ளது. மேலும், இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுகிறது என்பதால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணியும் வலுவாக இருப்பதால், இந்த அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.