மாநில செய்திகள்

மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை முன்னிட்டு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்- ஓ.பன்னீர் செல்வம் + "||" + Late Navalar Nedunchezhiyan's  Centennial The ceremony will be held on behalf of the Government-O. Paneer selvam

மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை முன்னிட்டு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்- ஓ.பன்னீர் செல்வம்

மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை முன்னிட்டு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்- ஓ.பன்னீர் செல்வம்
நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா எடுக்கப்படும் என சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை,

சட்டப்பேரவையில் இன்று எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும்போது, நடமாடும் பல்கலைக்கழகம் என போற்றப்படுபவரும், அடிப்படை திராவிட கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாவலரின் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம்  ஆலோசனை நடத்தியதாகவும், திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு தனி விழாவாக அரசு விழா எடுக்கப்படும் என்றார்.   நாவலர் நெடுஞ்செழியனின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
கடுமையான வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்தார்.