மாநில செய்திகள்

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + 8 ways to reduce accidents EdappadiPalaniswami

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை,

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக-காங். ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது, தற்போது எங்கள் பக்கம் பழியை திருப்பிவிடுகிறார்கள். மக்கள் செல்வாக்கு இல்லாததால் வேலூரில் தினகரன் போட்டியிடவில்லை.

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கவே 8 வழிச்சாலை கொண்டுவரப்படுகிறது.  8 வழிச்சாலை சேலத்திற்கானது மட்டுமல்ல, இந்த சாலையால் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படும்.

சாலை அமைக்க வேண்டியது அரசின் கடமை. 8 வழிச்சாலை மாநில அரசின் திட்டமல்ல.  8 வழிச்சாலை திட்டத்தால் 70 கி.மீ. பயண தூரம் குறையும். இந்த திட்டம் வந்தால் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்று தான் எதிர்க்கின்றனர்.

மத்திய அரசின் திட்டம். கையகப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கு கடந்த ஆட்சியை விட அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது.

அனைத்து ஆட்சியிலும் ஆணவப் படுகொலைகள் நடந்து தான் வருகின்றன. ஆணவ கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக தான். இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளதால் எங்கள் மீது பழி போடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற இணையதளம்: முதல்-அமைச்சர் பழனிசாமி
முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. மேகதாதுவில் அணை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
3. முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
4. ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ : முதல்-அமைச்சர் வரவேற்பு
அனைத்துத்துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த ‘பட்ஜெட்’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று உள்ளார்.