தேசிய செய்திகள்

"ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுங்கள்" - திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை + "||" + Father Periyar Name the Erode Railway Station Kanimozhi request

"ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுங்கள்" - திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை

"ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுங்கள்" -  திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை
ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

மக்களவையில் உரையாற்றிய திமுக எம்.பி.கனிமொழி, அரசு திட்டங்களுக்கு எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு, ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு குறைவு என்றும், பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, மத்திய அரசு செயல்படுவதாக, தமிழ் பழமொழியை சுட்டிக்காட்டி மக்களவையில் அவர் பேசினார்.  

மேலும், ரெயில்வே திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது தமிழகம் போன்ற மாநிலங்களில் வாழும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.