தேசிய செய்திகள்

டோனி ரன் அவுட்: மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர் உயிரிழப்பு + "||" + Kolkata Fan Dies After MS Dhoni’s Run Out Against New Zealand

டோனி ரன் அவுட்: மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர் உயிரிழப்பு

டோனி ரன் அவுட்: மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர் உயிரிழப்பு
நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதால் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,

நேற்று நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில்  இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. 

இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மைட்டி என்பவர் இந்தியா-நியூசிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை செல்போனில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது டோனி ரன் அவுட் ஆனபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள கடைக்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு புறம் இருக்க, இந்தியா வெற்றி பெற்று விடும் நம்பிக்கை டோனி அவுட் ஆனதும் மங்கியது. பெவிலியன் திரும்போது டோனி அழுதுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நேற்று இரவு முதல் வரை அவரை வாழ்த்தி தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.  ஒட்டு மொத்த இந்திய அணியும் நேற்று சோகத்தை காட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...