தேசிய செய்திகள்

ஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் பலி + "||" + Boy dies after falling into lake while making TikTok video

ஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் பலி

ஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் பலி
ஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் உயிரிழந்தார்.
ஐதராபாத், 

ஐதராபாத் அருகே உள்ள ஒரு ஏரியில் 2 வாலிபர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவர். ‘டிக் டாக்’ ‘ஆப்’பில் வெளியிடுவதற்காக, தாங்கள் குளிப்பதை அவர்கள் வீடியோ எடுத்தனர்.

அவர்களில் ஒருவரான நரசிம்மலு (வயது 24) என்பவர், வீடியோவில் தெளிவாக தெரிய வேண்டும் என்று நகர்ந்தபோது, திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால், தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார்.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஒன்று விட்ட சகோதரர், ஏரியை விட்டு வெளியே வந்து உள்ளூர் மக்களிடம் தகவல் தெரிவித்தார். உள்ளூர்காரர்கள் ஏரியில் குதித்து, நரசிம்மலுவை பிணமாக மீட்டு வந்தனர். இறப்பதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு ‘டிக் டாக்’ வீடியோவில், அவர்கள் தண்ணீரில் நடனமாடும் காட்சி இடம்பெற்று இருந்தது.