மாநில செய்திகள்

பா.ஜ.க.வை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு + "||" + Congress to stage protests tomorrow

பா.ஜ.க.வை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பா.ஜ.க.வை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரதீய ஜனதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது. மத்தியிலும், மாநிலங்களிலும் பா.ஜ.க. கட்சி மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என்ற சர்வாதிகார, பாசிச போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

 கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசை குதிரை பேரத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து வருகிற பா.ஜ.க.வை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வருகிற சனிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் (கே.எஸ்.அழகிரி) பங்கேற்கிறேன். இதில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச்செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...