உலக செய்திகள்

சவுதியில் முன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய பெண்ணுக்கு சிறை + "||" + Bad news for former husband in Saudi

சவுதியில் முன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய பெண்ணுக்கு சிறை

சவுதியில் முன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய பெண்ணுக்கு சிறை
சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார்.
துபாய்,

சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில், அந்தப் பெண் அவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான வார்த்தைகளைக் கொண்ட செய்தி அனுப்பினார். அதில் அவரை பிசாசு, முரடன் என குறிப்பிட்டிருந்ததுடன் மோசமான வார்த்தைகளை நிறையப் பயன்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக அவரது முன்னாள் கணவர், ஜெட்டா நகர குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

விசாரணையின்போது அந்தப் பெண், திருமணமானபோது தன் குடும்பத்தை புண்படுத்தியதால்தான் இப்போது அவ்வாறு மோசமான வார்த்தைகளைக் கொண்ட செய்தியை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் அவருக்கு 3 நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...