மாநில செய்திகள்

ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் : குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து + "||" + Atthivarathar in orange silk decoration By the arrival of the President of the Republic Devotees cancel the darshan for 4 hours

ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் : குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து

ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் : குடியரசு தலைவர் வருகையால்  4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து
அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருவதால், பக்தர்களுக்கான தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப்பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். அதன்படி பன்னிரெண்டாம் நாளான இன்று, அத்திவரதருக்கு ஆரஞ்சு நிறப்பட்டு ஆடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, குடியரசு தலைவர் இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய வருவதால், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை, பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம் என்றும், கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதர் தரிசனம் - நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது - ஆட்சியர் பொன்னையா
அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
2. அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரி பொதுநல வழக்கு; நாளை விசாரணை
அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய பொதுநல வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
3. அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை
அத்திவரதர் சிலை திட்டமிட்டப்படி வருகிற 17-ந்தேதி அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படும் என்றும் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
4. 17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா
ஆகம விதிகளின் படி 17-ம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
5. அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா? -அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில்
அத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...