மாநில செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு + "||" + To release 7 people including perarivazan  The governor cannot order a court Government of Tamil Nadu

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு
பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
சென்னை,

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் கவர்னர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு, 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு கவர்னருக்கு  உத்தரவிட வேண்டும் என கோரியது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர்  சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார். 

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னருக்கு  உத்தரவிட கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக பரோலில் விடுவிப்பு - ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
2. வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்
வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.