தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள் + "||" + Apologise To People For Mistakes: Mamata Banerjee To Trinamool Leaders

எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி வழங்கிய 6 கட்டளைகள்
திரிணாமுல்காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மம்தா பானர்ஜி 6 கட்டளைகளை வழங்கி உள்ளார்.
கொல்கத்தா,

2021-ல் மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) வெற்றியை உறுதி செய்வதற்கான திட்டம் வகுப்பதில் முதலமைச்சரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கொல்கத்தாவில் உள்ள டி.எம்.சி பவனில் தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோனை நடத்தினார். அந்த ஆலோசனையில், கட்சி உறுப்பினர்களுக்கு 6 முக்கியமான கட்டளைகளை  வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மம்தா பானர்ஜி  வழங்கிய கட்டளைகள் விவரம் வருமாறு:-

1. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இப்போது மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். 

2. எந்தவொரு விவகாரத்திலும் சிக்காதீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

3. நிர்வாகம் மற்றும் காவல்துறையை நம்ப வேண்டாம். உங்களுக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள். சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் நடத்தையை சரியாக வைத்திருங்கள்.

4. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள்.

5. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 4 பேர் கொண்ட குழுவை உருவாக்குங்கள். அந்த குழுவில் ஒரு சமூக ஊடக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குச்சாவடி மேம்பாட்டு மேலாளரை நியமியுங்கள்.

6. தவறான அறிக்கைகளையோ, கருத்துகளையோ யாரும் சொல்லக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சியின் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?
மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
2. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி
கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு
ஒரே தேசம்-ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
4. தமிழகம் இந்தி படிக்க வேண்டுமென பா.ஜனதா சொல்ல முடியாது மோடி அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்
இந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
5. மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.