மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை + "||" + Athivarathar visit Republic President Ramnath Govind visits Chennai

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.
சென்னை,

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

இந்நிலையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தார்.  அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநர் வரவேற்றனர்.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்க உள்ளார். இதனையடுத்து காஞ்சீபுரத்தில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்: தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்களும் தரிசித்தனர்
அத்திரவரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் திரண்டதால் காஞ்சீபுரம் திக்குமுக்காடியது. மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்களும் அத்திவரதரை தரிசித்தனர்.