தேசிய செய்திகள்

கர்நாடக அரசியல் : பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது - முதல்வர் குமாரசாமி + "||" + Karnataka Politics:A vote of confidence is held by many Good Chief Minister Kumaraswamy

கர்நாடக அரசியல் : பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது - முதல்வர் குமாரசாமி

கர்நாடக அரசியல் : பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது - முதல்வர் குமாரசாமி
பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கேட்டு கொண்டார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், அரசு தானாகவே கவிழ்ந்து விடும். 
 
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மதியம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள். பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று ஆலோசனை
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தினார்.
2. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் -முதல்வர் குமாரசாமி உருக்கம்
கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என சட்டசபையில் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசினார்.
3. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் -குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
4. கர்நாடக சட்டசபை: 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது
அதிருப்தி எம் எல் ஏக்கள் சட்டசபைக்கு வந்து கையெழுத்து போடாவிட்டால் எந்த சலுகையும் பெற முடியாது என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
5. 20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் கண்ட கர்நாடகம் ; நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா?
20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் கண்ட கர்நாடகம். நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தப்பி பிழைக்குமா? என்பது வியாழக்கிழமை தெரியவரும்.

ஆசிரியரின் தேர்வுகள்...