தேசிய செய்திகள்

சுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தமிழக திருநங்கை நியமனம் + "||" + Swiggy has hired a transgender techie who will now run an in-house LGBT support group

சுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தமிழக திருநங்கை நியமனம்

சுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தமிழக திருநங்கை நியமனம்
சுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சுவிக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது.  

சுவிக்கி நிறுவனம் தனது முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்பவரை நியமித்துள்ளது. தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். தற்போது இவர் சுவிக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.