மாநில செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசித்தார் + "||" + President Ramnath Govind With his wife atththivarathar tharsan

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசித்தார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அத்திவரதரை தரிசித்தார்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் தரிசனம் செய்தார்.
காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தைக்காண தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் வந்தடைந்தார். பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் வரதராஜ பெருமாள் கோவில் வந்த குடியரசு தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். 

தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்த குடியரசு தலைவர், கோவிலின் வரலாற்றையும் அத்திவரதரின் வரலாற்றையும் கேட்டறிந்தார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அத்திவரதரின் பழைய மற்றும் புதிய புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன.

குடியரசு தலைவருடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி நகரில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகரிப்பு அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 வரை தரிசிக்கலாம்
காஞ்சீபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
3. அத்திவரதர் விழா காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் ஆய்வு
அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
4. அத்திவரதர் சிலையை வெளியே கொண்டுவர காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
5. காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் ஓட்டு விவரம்
காஞ்சீபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியானது.