மாநில செய்திகள்

நடிகர் சங்கத்தேர்தல்: விஷால் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றம் + "||" + Rejection of Vishal request - Madras High Court

நடிகர் சங்கத்தேர்தல்: விஷால் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சங்கத்தேர்தல்: விஷால் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
விஷால் கோரிக்கையை 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை,

நடிகர் சங்கத்தேர்தல் ஜூன் 23-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.  நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சவுத் இந்தியன் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகளை  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்களிக்க முடியாது என்பதால்  வாக்குகளை எண்ண வேண்டும் என்று  நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஷாலின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது.  மேலும் வாக்களர் பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க, ஆக.2ம் தேதி வரை பதிவாளருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஷாலின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்  ஆகஸ்ட் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தது.  வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்குகளை என்ன அனுமதிக்க முடியாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. ஓமியோபதி கல்லூரியில் மாணவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி தொல்லையா? போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஓமியோபதி கல்லூரியில் மாணவரை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி, சில மாணவர்கள் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டது.
3. பால்வள கூட்டுறவு சங்கத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு: மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பால்வள கூட்டுறவு சங்கத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. பாலியல் குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் போலீஸ்காரருக்கு சிறிய தண்டனை வழங்கியது எந்திரத்தனமானது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி
பாலியல் குற்ற வழக்கில் குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் போலீஸ்காரருக்கு சிறிய தண்டனை வழங்கியது எந்திரத்தனமானது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
5. அறநிலையத்துறை அதிகாரி கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் பொன் மாணிக்கவேலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.