மாநில செய்திகள்

தமிழன் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது -தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Trying to distort the Tamil mythology MKStalin

தமிழன் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது -தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழன் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது -தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழன் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது என்று தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர் வைரமுத்து. திரைத்துறையில் அவரை விட அதிக விருது பெற்றவர் யாரும் இல்லை.  வடமொழி ஆதிக்கத்தை புகுத்த நினைக்கும் இந்த நிலையில், வைரமுத்து தமிழாற்றுப்படை நூலை தந்துள்ளார்.

தமிழன் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். ஆத்திகம், நாத்திகம் என்ற வேறுபாடின்றி தமிழுக்கு தொண்டாற்றியவர்களை பதிவு செய்துள்ளார் வைரமுத்து. மிகச்சரியான  நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வரலாற்றில் நாகரிகத்தின் அடையாளம்.  சிலர் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழில் பேசுவதும், எழுதுவதும் இல்லை, இது தமிழ் மொழிக்கு அழிவை தரும் என்றார்.