தேசிய செய்திகள்

நேபாளத்தில் கனமழைக்கு 16 பேர் பலி + "||" + Floods and landslides kill 15 in Nepal, six others missing

நேபாளத்தில் கனமழைக்கு 16 பேர் பலி

நேபாளத்தில் கனமழைக்கு 16 பேர் பலி
நேபாளத்தில் கனமழைக்கு 16 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்மாண்டு, 

நேபாள நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்தநிலையில்  காத்மாண்டு முல்பானி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒரு வீடு தரைமட்டமானது. வீட்டில் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்தனர்.

இதேபோல நாடு முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரில் மூழ்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.