தேசிய செய்திகள்

அருணாசலபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை + "||" + Former Arunachal Pradesh CM booked on charges of corruption, cheating

அருணாசலபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை

அருணாசலபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
அருணாசலபிரதேச மாநிலத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை முதல்–மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியின் நபம் துக்கி.
புதுடெல்லி, 

அருணாசலபிரதேச மாநிலத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை முதல்–மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியின் நபம் துக்கி.

இவர் 2003–ம் ஆண்டு அங்கு நுகர்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் இவர் எந்தவித நெறிமுறையும் இன்றி ரூ.3¼ கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தத்தை தனது சகோதரர் நபம் தகமுக்கு வழங்கி ஊழல் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் நபம் துக்கி மீது ஊழல் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.