மாநில செய்திகள்

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல் + "||" + Action to prevent elephants from entering the town Dindigul Srinivasan Information

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் ஜக்கையன், கம்பம் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் வரும் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
சென்னை, 

சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் ஜக்கையன், கம்பம் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் வரும் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், கடையநல்லூர் பகுதியில் யானைகள் அட்டகாசம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:–

கம்பம் பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க யானை தடுப்பு அகலிகள், சூரிய மின்சாரத்தில் இயங்கும் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. உயர் கோபுரங்கள் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. யானைகள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில் யானை மிதித்து உயிர் இழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி, கருப்பாநதி, அடவிநயினார் அணை போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவேக குழுவினர் உள்ளிட்டோர் யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். யானைகள் வனத்தில் இருந்து வருவதை தடுக்க ரூ.50.9 லட்சம் மதிப்பில் 19.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை புகா அகலிகள் வெட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...