மாநில செய்திகள்

சென்னையில் குறைந்தழுத்த, உயரழுத்த மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 2021-ம் ஆண்டு முடியும் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பி.தங்கமணி பதில் + "||" + The work of converting low and high power wires into fossil wires in Chennai

சென்னையில் குறைந்தழுத்த, உயரழுத்த மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 2021-ம் ஆண்டு முடியும் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பி.தங்கமணி பதில்

சென்னையில் குறைந்தழுத்த, உயரழுத்த மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 2021-ம் ஆண்டு முடியும் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பி.தங்கமணி பதில்
சென்னையில் குறைந்தழுத்த மற்றும் உயரழுத்த மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 2021-ம் ஆண்டு முடிவடையும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.
சென்னை,

சென்னையில் குறைந்தழுத்த மற்றும் உயரழுத்த மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்றும் பணி 2021-ம் ஆண்டு முடிவடையும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பி.தங்கமணி பதில் அளித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், குறைந்தழுத்த மற்றும் உயரழுத்த மின் கம்பிகளை, புதைவட மின்கம்பிகளாக மாற்றுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதைவட கம்பிகளாக மாற்ற வேண்டும்

குறைந்தழுத்த, உயரழுத்த மின் கம்பிகளை புதைவட மின் கம்பிகளாக மாற்றுவது குறித்து இந்த அவையில் ஏற்கனவே பல முறை வலியுறுத்தி இருக்கிறேன். இதற்கு காரணம், மின் கசிவினால் மழைக்காலங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுவதால் பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது. அதையும் இந்த அவையில் நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

கொளத்தூர் தொகுதியில் தற்போது 93 கோடி ரூபாயில் 270 கிலோ மீட்டர் அளவிற்கு எல்.டி. மற்றும் எச்.டி. எனப்படுகின்ற புதைவட மின்கம்பிகளாக மாற்றுவதற்கு பணியை தொடங்கியிருக்கிறார்கள்.

பெரம்பூர் பகுதியில் 595 கி.மீட்டர் அளவிற்கு 209 கோடி ரூபாய் அளவிற்கு புதைவட கம்பிகளை மாற்றுவதற்கு பணிகளை துவங்கியிருக்கின்றார்கள். இந்தப் பணி நிறைவுபெறுவதற்கு இரண்டு ஆண்டுகாலம் ஆகும் என்று எனக்கு செய்தி வந்திருக்கின்றது. எனவே, இந்தப்பணிகளை இரண்டு ஆண்டுகாலம் நீட்டிக்காமல் இந்த ஆண்டிற்குள் முடிக்க வேண்டும்.

கொளத்தூர் தொகுதி பெரம்பூர் வட்டம் போல் தமிழ்நாட்டில் உள்ள உயர் மின்னழுத்தம், குறைந்த மின்னழுத்தம் கம்பிகளை மாற்றுவதற்கான பணி தமிழ்நாடு முழுவதும் ரூ.2,567 கோடி ரூபாயில் துவங்கப்பட்டிருக்கின்றதா? அப்படி துவங்கப்பட்டிருந்தால் குறைந்த கால அளவிற்குள் இந்தப் பணிகளை நிறைவேற்றி விபத்துகளை நீங்கள் தடுக்க வேண்டும். அதற்கு விரைந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வருமா?

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து மின் துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

2021-க்குள் முடியும்

சென்னை முழுவதும் 6,531 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2,567 கோடி ரூபாயில் குறைந்தழுத்த மற்றும் உயரழுத்த மின் கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம். ரூ.2,567 கோடி நிதி என்பது சென்னைக்கு மட்டும் தான். ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இல்லை. கொளத்தூரில் இந்த ஓராண்டிற்குள் பணிகள் முடியும்.

இந்த பணிகளை பொதுவாக பகலில் மேற்கொள்ள முடியாது. இரவு நேரங்களில் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் மண்ணில் துளையிட்டு தான் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கொளத்தூரை தவிர மற்ற பகுதிகளில் பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும். ஒட்டுமொத்த பணிகள் 2021-க்குள் முடிவடையும். தாம்பரம் பகுதியில் ரூ.352 கோடியில் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.