மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மறியல்உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமைப்பினர் கைது + "||" + Students are demanding the cancellation of the hydrocarbon project

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மறியல்உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமைப்பினர் கைது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் மறியல்உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமைப்பினர் கைது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற அமைப்பினர் கைது செய்யப்பட்டார்.

சாலை மறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென தஞ்சை-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

இதை பார்த்த கல்லூரி பேராசிரியர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, “ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை மத்திய அரசு கைவிடாவிட்டால் மாணவர்களை ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியதை போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

போலீஸ் தடை

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களை ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வேளாண்மை மானிய கோரிக்கையின்போது அறிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்த கோரிக்கை நிறைவேறும் வரையும் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு தடையும் விதித்தனர். ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைது

இந்த நிலையில் லெனினுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க வந்த தமிழ்தேசிய விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தியாகு, தமிழர் அறம் அமைப்பை சேர்ந்த ராமசாமி, உழைக்கும் மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தம்பி.மோகன்ராஜ் மற்றும் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதற்கிடையே லெனின் உண்ணாவிரதம் இருப்பதற்காக தனது இயக்க நிர்வாகிகளுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அந்த காரை கலெக்டர் அலுவலகம் அருகே வழிமறித்த போலீசார், காரின் உள்ளே இருந்த லெனினை கீழே இறக்கி அவரையும், அவருடன் வந்தவர்களையும் போலீஸ் வேனில் ஏறும்படி கூறினர். ஆனால் வேனில் ஏற மறுத்த லெனின், உண்ணாவிரதம் இருக்க வழிவிடுங்கள் என்று கூறினார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவர் காரின் அருகே தரையில் அமர்ந்தார். உடனே அவரையும், அவருடன் வந்த நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.