மாநில செய்திகள்

தேச துரோக வழக்கு; சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு + "||" + Treason case; Vaiko appeals against prison sentence

தேச துரோக வழக்கு; சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு

தேச துரோக வழக்கு; சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு
தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 2009ல் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.  2009ம் ஆண்டில் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை அன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஓராண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என வைகோ தெரிவித்து உள்ளார்.  தண்டனையை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மகிளா கோர்ட்டு உத்தரவு
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.