தேசிய செய்திகள்

மழை பெய்தாலும் திட்டமிட்டபடி திங்கள் அதிகாலை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் + "||" + Despite the rain Monday morning as planned Chandrayaan 2 launches

மழை பெய்தாலும் திட்டமிட்டபடி திங்கள் அதிகாலை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்

மழை பெய்தாலும் திட்டமிட்டபடி திங்கள் அதிகாலை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்
மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

ஜூலை-15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும் மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும், மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான செயல்திட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு
ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
2. சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன? புதிய தகவல்கள்
சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதற்கான தொழில்நுட்பக் கோளாறு என்ன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. சந்திரன் எங்கிருந்து வந்தது? இஸ்ரோவின் புதிரான ட்வீட்
சந்திரன் எங்கிருந்து வந்தது? சந்திராயன் 2 அறிமுகத்திற்கு முன்னதாக இஸ்ரோ புதிரான ட்வீட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
4. சந்திராயன் 2 திட்டத்திற்கு காங்., ஆட்சியில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை -மாதவன் நாயர்
சந்திராயன் 2 திட்டத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறி உள்ளார்.
5. ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது, சந்திரயான்-2
சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.